Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தவெக கொடியில் யானை சின்னம்- பகுஜன் சமாஜ் கட்சி புதிய மனு
    அரசியல்

    தவெக கொடியில் யானை சின்னம்- பகுஜன் சமாஜ் கட்சி புதிய மனு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1328093
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என
    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயண் நேரில் ஆஜராகி வாதிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் வழக்கறிஞர் பி.ஆனந்தன் காணொலி காட்சி மூலமாக ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

    அப்போது, தவெக தரப்பில் வாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் முழுமையான வாதங்கள் வைக்கப்படாத நிலையில் வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்கள் முன்வைக்க அனுமதிக்கக்கோரியும், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்க கோரியும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இன்று புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, பகுஜன் சமாஜ் தரப்பில் நாளை மேற்கொண்டு வாதங்களை முன் வைப்பது தொடர்பாக பதிலளிக்க தவெக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை
    Next Article திருச்செந்தூர் கோயில் குடமுழக்கில் தமிழ் மந்திரங்கள்.. இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுக்க உத்தரவு..
    Editor TN Talks

    Related Posts

    சங்கீதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?. வேட்புமனுவில் காட்ட வேண்டிய கணக்கு!. குழப்பத்தில் விஜய்!

    March 12, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திமுக ஏமாற்றியது- மோடி

    March 11, 2026

    தவெக வேட்பாளர் தேர்வு: டிவிஸ்ட் வைக்கும் விஜய்! சமாளிக்கும் செ.பாலாஜி..!

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    March 13, 2026

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    March 13, 2026

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    March 13, 2026

    தேர்தல் எதிரொலி!. கொமதேக-க்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.