Close Menu
    What's Hot

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»திருச்செந்தூர் கோயில் குடமுழக்கில் தமிழ் மந்திரங்கள்.. இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுக்க உத்தரவு..
    ராசிபலன்

    திருச்செந்தூர் கோயில் குடமுழக்கில் தமிழ் மந்திரங்கள்.. இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுக்க உத்தரவு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tiruchendur Gopuram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை, கருவறை, கோபுரவிமான பூஜை ஆகியவற்றை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
    இந்து சமய அறநிலையத்துறையின் தரப்பில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் இணை ஆணையர் பதில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, பன்னிரு திருமுறைகள் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது முதல் குடமுழுக்கு வரை நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன. குடமுழுக்கின் போது தமிழ் வேத மறைகளும், சமஸ்கிருத வேதங்களும் ஓதப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், “கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் விழாக்களில் இந்து சமய அறநிலையத் துறையின் விதிகள் மீறப்பட்டால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரையோ, அல்லது சம்பந்தப்பட்ட அலுவலரையோ அணுகலாமே தவிர நீதிமன்றம் தலையிட இயலாது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கொடியில் யானை சின்னம்- பகுஜன் சமாஜ் கட்சி புதிய மனு
    Next Article விசாரணை கைதிகளை துன்புறுத்தக் கூடாது… ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.