Close Menu
    What's Hot

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!
    அரசியல்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Editor TN TalksBy Editor TN TalksOctober 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘நீதி வெல்லும்’ என தவெக தலைவர் விஜய் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும்” என்று தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதனையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், “நீதி வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    CBI investigation karur stampede TVK Vijay X post எக்ஸ் தள பதிவு கரூர் கூட்டநெரிசல் சிபிஐ விசாரணை தவெக விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிட்டங்கள் எந்த நிலையில் இருக்கிறது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    Next Article பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்
    Editor TN Talks

    Related Posts

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. EPS திட்டம்!.

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    February 16, 2026

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.