பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை அதிகாரிகளுடன், சுகாதாரதுறை அதிகாரிகள், ஆலோசனை நடைபெற உள்ளது.
குறிப்பாக, ஒவ்வொறு ஆண்டும் வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அதிகபடியான பாதிப்புகள் எதிர்கொள்ளும். இந்த நிலையில் மழை நீர் வடிகால் பணிகள், தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ள இடங்களில் மோட்டார் பம்ப் வசதிகள், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்க இருக்க கூடிய மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் அடிப்படை வசதி, உணவு, மருத்துவ முகாம் அமைப்பது, பொது மக்களை தங்க வைக்க முகாம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் உதயநிதி கேட்டறிகிறார்.
