மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் விஜய் சரமாரியாக சாடியுள்ளார்.
மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய், வழக்கம் போல திமுகவையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக சாடினார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்காமல் மனசாட்சி இல்லாமல் சிறந்த முதலமைச்சர் என எப்படி கூறிக் கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். அதாவது, பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது கருப்பு பலூன் விட்டு GO BACK MODI எனக் கூறுவது; ஆட்சிக்கு வந்த பிறகு வாங்க மோடி என குடை பிடித்துக் கொண்டு கும்பிடுபோடுவது.
இதுமட்டுமா? ரெய்டு வந்தவுடன், முன் எப்போதும் இல்லாத அளவு, இங்கு ரெய்டு நடக்கும் போது, செல்லாத ஆட்கள் எல்லாம் டெல்லி சென்று பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள். நன்றாக சிந்தித்து பாருங்கள், அந்த மறைமுக பேச்சுவார்த்தை நடந்த பிறகு அந்த ரெய்டு காற்றில் மறைந்து போயிருக்கும்.
மக்களே சிந்தியுங்கள்; STALIN UNCLE!! WHAT UNCLE!! ITS VERY WRONG UNCLE!! இவ்வாறு தவறுகள் நடப்பதை பார்த்துக் கொண்டு நாம் எப்படி சும்மா இருக்க முடியும்? ”ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவர் கபட நாடக மு.க.ஸ்டாலின் uncle-ஆக இருந்தாலும் கேள்வி எழுப்புவோம். UNCLE!!UNCLE!! உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்..
இந்த ஆட்சியில் நேர்மை உள்ளதா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு இருக்கா? பெண்களுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா? சொல்லுங்க MY DEAR UNCLE!! சொல்லுங்க.. டாஸ்மாக்கில் மட்டுமே இதுவரை ரூ.1000 கோடி ஊழல் என சொல்கிறார்கள்.. அங்கு மட்டுமா நடக்குது?
உலக்கத்திலேயே மிஸ்டர் கிளீன் என்ற ரெக்கார்டுகள் எல்லாம் உங்களுக்கும் உங்களுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் UNCLE!!இதைப் பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள்.. பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டா போதுமா UNCLE!! படிக்க, வேலைக்கு போகும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா? அவர்களின் கதறல் சத்தம் உங்கள் காதுகளுக்கு கேட்கிறதா? இதில் தங்களை ’அப்பா’
என அனைவரும் அழைப்பதாக கூறிக் கொள்கிறீர்கள்… what UNCLE!! its very wrong UNCLE!! என்றார்.