திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் இல்லத் திருமண விழாவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே காரில் வந்து கலந்து கொண்டது, அண்மையில் வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று அமைந்துள்ளது.

விஜய்யிட​ம் இருந்து விவாகரத்து கோரி அவருடைய மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

தனக்கும், தனது கணவர் விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10ல் இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்ததாக மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார். அதன்பிறகு தங்களது திருமணம் இந்து முறைப்படி 1999 ஆக. 25ல் சென்னை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்ததாக குறிப்பிட்டிருந்தார். தங்களுக்கு ஜேசன் சஞ்சய்​ (25) என்ற மகன், திவ்யா சாஷா (20) என்ற மகள் உள்ளதாக மனுவில் அவர் கூறி இருந்தார்.

தனது கணவர் விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்தது கடந்த 2021 ஏப்ரல் மாதம் தனக்கு தெரியவந்ததாக சங்கீதா தெரிவித்திருந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், உறவுகள் மற்றும் சமூகத்தில் தானும், தனது குழந்தைகளும் பாதிக்கப்பட்டதாக அவர்  குறிப்பிட்டிருந்தார். நடிகை உடனான உறவைத் துண்டித்து விடுதாக விஜய் கூறிய போதும், அதன்படி அவர் நடந்துகொள்வில்லை என சங்கீதா தெரிவித்திருந்தார். சுமூகமாகப் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை என அவர் கூறி இருந்தார். தேவைபட்டால், நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

மனைவி என்ற முறையில் தனக்கும், குடும்பத்துக்கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் கணவர் விஜய் நிறுத்திவிட்டதாகவும் மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார். தற்போதுங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பதால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் சங்கீதா கூறியிருந்தார்இந் வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்தநிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க விஜய்யும், திரிஷாவும் ஒரே நிற உடையில் ஒரே காரில் வந்திறங்கியது, சங்கீதாவின் புகார் மற்றும் தங்களைச் சுற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் நடந்து கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version