முதல் அமைச்சர் விஜய்க்கு உரிய கால அவகாசம் கொடுத்து அதன்பின்னர் மக்கள் பிரச்னைகளை சட்டப்பேரவையில் பேசுவோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்  தேமுதிக இடம்பிடித்து 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றுமே வெற்றி பெற்றார்.

இன்று சட்டசபைக்கு வருகை தந்த பிரேமலதா முதன்முறையாக எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். உறுதிமொழி வாசிப்பதற்கு முன்பாக முதலமைச்சர் விஜய்க்கு மகிழ்ச்சியுடன் வணக்கம் செலுத்தியவர், பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுகவினருக்கும் வணக்கம் செலுத்தினார்.

 

இதன்பின்னர்  சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தன்னை வெற்றி பெற வைத்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சிதலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குவதாகக் கூறிய அவர், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன், விஜய்க்கு உரிய கால அவசாகம் கொடுப்போம் எனவும், அதன் பின்னரே, மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம் எனவும் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version