10வது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த மைதானத்தில் இன்று (பிப்ரவரி 12) இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், முன்னதாக இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியின் நிகழ்ந்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது கடந்த 10ம் தேதி நடந்த நெதர்லாந்து – நமீபியா போட்டிக்குப் பிறகு, மைதான வளாகத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள ஊழியர் ஒருவர் பேப்பர் கப்பில் இருந்து கூல்ட்ரிங்க்ஸை பாட்டில்களில் நிரப்புவதை அந்த வீடியோவில் காணலாம். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்,
https://x.com/IPL2025Auction/status/2021848190379765840?
இருப்பினும், வைரலாகப் பரவும் அந்த வீடியோவில், பணியாளர்கள் பாட்டில்களை மீண்டும் நிரப்பி அடுத்த போட்டியில் விற்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை. போட்டி முடிந்த பிறகு, கண்ணாடி கோப்பைகளிலோ அல்லது பாட்டில்களிலோ இருக்கும் பானங்களை அப்படியே வைத்திருக்க முடியாது; அவை பொதுவாக அகற்றப்படுகின்றன. எனவே, முந்தைய போட்டியில் மீதமிருந்த அதே பானங்களை இந்தியா–நமீபியா போட்டியில் மீண்டும் விற்கப்படுகின்றன என்று கூறுவது தவறானதாகும்.
