ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவுடன் வங்கதேச அணி மோதுகிறது.

17வதுஆசிரிய கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் என மொத்தமாக 8 அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் அடுத்த வெற்றியை பதிவு செய்ய பலப்பரீட்சை நடத்தப்பட உள்ளன. இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இளைஞர் ஒருநாள் தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றான. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்றிய போட்டியில் ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதுகின்றன. இது உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version