2007-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யின் வருமானம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகின் திறமையான வீரர்களும் பங்கேற்பதால், உலக அளவில் ’நம்பர் 1 டி20 லீக்’ ஆக ஐபிஎல் கருதப்படுகிறது. இதனால் இந்த தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மட்டுமின்றி வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஐபிஎல் தொடர் அல்லாமல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமைகள் மூலம் பி.சி.சி.ஐ-க்கு ரூ.361கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-க்கு 2023-2024-ம் ஆண்டில் மட்டும் ரூ.9,741 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஐ.பி.எல் தொடரால் மட்டும் ரூ.5,761கோடி வருமானம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.