ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் மற்றும் ஹைதி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் பிலடெல்பியாவில் நடைபெற்றது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணியில் 23-வது நிமிடத்தில் மதேயுஸ் குன்ஹா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசிலுக்கு 36வது நிமிடத்தில் மீண்டும் குன்ஹா கோல் அடித்து அணியின் கணக்கை 2ஆக உயர்த்தினார்.

முதல் பாதியில், பிரேசில் நட்சத்திர வீரர் வினீசியஸ், ஜூனியர் அணிக்கான 3-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோல் அடித்து போட்டிக்குள் மீண்டும் வர ஹைதி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது.

ஆனால் பிரேசில் அணியின் தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. மதேயுஸ் குன்ஹா அடித்த இரட்டை கோல் பிரேசிலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version