சென்னையில் திறக்கப்பட்டுள்ள முதல் பேடல் மையத்தில் தோனியுடன் அனிரூத் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி, சென்னையில் தனது முதல் பேடல் விளையாட்டு மையத்தை தொடங்கியுள்ளார். இதனை அனிரூத், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக தோனி சென்னையில் முகாமிட்டுள்ளார்.

பாலவாக்கத்தில் 20,000சதுர அடியில் 7 பேடல் என்ற விளையாட்டு மையத்தை தோனி தொடங்கி இருக்கிறார். இவை போக ஜிம், உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுக்க சிறப்பு அறை, கஃபே, நீராவிக் குளியல் போன்ற வசதிகளுன் இந்த ஸ்போர்ட்ஸ் செண்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பேடல் மையத்தை சி.எஸ்.கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் திறந்து வைத்தனர். பிறகு மூவரும் சேர்ந்து பேடல் விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version