இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் ஓவர்கள் மழையால் குறைக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் கிரிகெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முதல்முறையாக வென்ற நிலையில், தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநால் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் சவுத்தம்டனில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி லண்டனின் லார்ட்சில் இன்று மாலை 3.30மணிக்கு தொடங்க இருந்தது.
ஆனால் அங்கு மழை பெய்ததால் ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், இந்த ஆட்டம் தலா 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படவுள்ளது.