இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2026) வரவிருக்கும் சீசனுக்கு முன்னதாக, கர்நாடக அரசு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அந்த அணியின் சொந்த மைதானமான எம். சின்னசாமி ஸ்டேடியத்தின் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது,
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஆர்சிபி நிர்வாகம்.
இந்தசூழலில் சின்னசாமி மைதானத்தில் இனிவரும் ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் எந்தப்போட்டியும் நடத்தப்படாது என்றும், சின்னசாமி மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானம் கட்டப்படும் எனவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் 2026 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை புனேவில் விளையாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிப்ரவரி 12 ஆம் தேதி, கர்நாடக அரசு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் மீதான தடையை நீக்கியது. ஆர்.சி.பி. இப்போது அந்த மைதானத்தில் அதன் சொந்த மைதானப் போட்டிகளை விளையாட முடியும், ஆனால் அரசாங்கம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், “அமைச்சரவை சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது, அதில் அதிகபட்சமாக 35,000 பேர் மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியும் அடங்கும்.
