தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டித் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் தற்போது நடக்கிறது. இந்தப் போட்டித் தொடர் முடிந்ததும், தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி ராய்ப்பூரில் வைத்து தேர்வு செய்யப்பட்டது.

காயம் காரணமாக 2 மாதங்களாக விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். இதையடுத்து இந்திய டி20 அணியில் மீண்டும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கழுத்து காயத்தால் அணிக்கு தேர்வு செய்யபட மாட்டார் எனக் கூறப்பட்ட சுப்மன் கில், ஆச்சர்யமளிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டித் தொடர் நடைபெறுகையில், அவர் முழுவதும் குணமடைந்து இருக்கும்பட்சத்தில் விளையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ரிங்கு சிங், நிதிஸ்குமார் ரெட்டி ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிசேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஸ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ச்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, வாசிங்டன் சுந்தர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version