ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள “ஆல்பா” திரைப்பட ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள ஆல்பா திரைப்படத்தை சிவ் ரவாலி இயக்கியுள்ளார். ஹீரோயினை மையமாக கொண்டு, ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் படம் உருவாகியுள்ளது. படத்தில் ஆலியா பட், சர்வாரி பாக் ஆகியோர் தலைமை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆல்பா திரைப்படம், வருகிற 25-ம் தேதியன்று திரைப்படங்களில் ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை ஆலியா பட்டும் உறுதி செய்து இருந்தார். ஆனால் பிறகு 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் தரன் ஆதர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆல்பா திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள “பேட்டில் ஆப் கால்வன்” படம் 2026 ஏப்ரல் 17-ல் ரிலீஸ் ஆவதால், அதனுடன் மோதுவதை தவிர்க்க படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆல்பா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்தப் பதிவில் தரன் ஆதர்ஸ் கூறியுள்ளார்.
