கேப்டன் அமெரிக்காவாக பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் இவான்ஸ் மீண்டும் நடித்திருப்பது உறுதியாகி இருப்பதால், அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மார்வல் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அந்த கதாபாத்திரத்தில் கிறிஸ் இவான்ஸ் நடித்து அசத்தி இருப்பார்.
ஆனால், அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் திரைப்படத்திற்கு பிறகு, கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் கிறிஸ் இவான்ஸை பார்க்க முடியவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் சாம் வில்சன் நடித்திருந்தார்.
ஆனால், அந்த கதாபாத்திரம் சாம் வில்சனுக்கு பொருந்தவில்லை. இதனால் கேப்டன் அமெரிக்கா ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். கிறிஸ் இவான்சை காண முடியாதா என ஏக்கத்தில் இருந்தனர்.
அவர்களது ஏமாற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆமாம், மார்வல் ஸ்டுடியோ நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாகியுள்ள அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. அதில், கிறிஸ் இவான்ஸ் மீண்டும் பைக்கில் வருவது, குழந்தையை கையில் வைத்திருப்பது ஆகிய காட்சிகள் உள்ளன.
டீசர் வீடியோ மூலம் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் கிறிஸ் இவான்ஸ் மீண்டும் நடித்திருப்பதை மார்வல் ஸ்டுடியோ நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படம் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

