ரன்வீர் சிங் நாயகனாக நடித்து வெளியான துரந்தர் திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

துரந்தர் படம் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அந்த படம் ரிலீஸ் ஆகி 22 நாள்கள் ஆன நிலையில், படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

படம் வெளியான நாளன்றே ரூ.23 கோடி வசூலித்தது. இதையடுத்து தொடர்ந்து படம் வசூலை குவித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் துரந்தர் படம் ரூ.700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்திய திரையரங்குகளில் நேற்று மட்டும் ரூ.16.80 கோடியை வசூலித்துள்ளது. இதையும் சேர்த்து, துரந்தர் படம் 22 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் இடையே படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆதலால் மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசூலில் ஏற்கெனவே அனிமல், ஸ்திரி-2 படங்களை துரந்தர் முறியடித்து விட்டது. பதான் திரைப்படம் ரூ.1,055 கோடி வசூலித்து படைத்த சாதனையை துரந்தர் நெருங்கி வருகிறது. விரைவில் அந்த சாதனையையும் முறியடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version