தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை குறிப்பாக டெஸ்ட் தொடர்களில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமாக விஷயமாகிவிட்டது. அதற்கு மிக முக்கிய புள்ளியாக விளங்கி வருபவர் அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்ற பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி, அந்த அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது தென் ஆப்பிரிக்கா. பின்னர் சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என்கிற கணக்கில் ஒயிட் வாஷ் செய்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய அணியை குறிப்பாக அதன் சொந்த மண்ணிலேயே வைத்து ஒயிட் வாஷ் செய்து தென் ஆப்பிரிக்கா அணி புதிய சாதனை படைத்துள்ளது.

11 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியை இதுவரை வழிநடத்தி வரும் தெம்பா பவுமா 11 போட்டிகளிலும் வென்று இருக்கிறார். அனைத்து ஏரியாக்களிலும் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நான் பள்ளி மாணவன். அப்பொழுது இந்திய அணியில் ரோகித் ஷர்மா விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு பள்ளி மாணவனாக ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தை கண்டு களித்தேன்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் கலந்து கொள்வது தொடரை சுவாரசியமாக்கும். அவர்கள் இருவரும் அவர்களுடைய அனுபவங்களை போட்டிக்குள் கொண்டு வருவார்கள். இது ஆட்டத்தை சுவாரசியப்படுத்தும்” என்று தென்னாபிரிக்க அணி கேப்டன் தெம்பா பவுமா புகழாரம் சூட்டியிருக்கிறார்.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து மூன்று போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் (முதல் போட்டியில் கேப்டன் தெம்பா பவுமா கலந்து கொள்ளவில்லை) நாளை (டிசம்பர் 3, 2025) இரண்டாவது போட்டி நடைபெற இருக்கிறது.

நாளை நடைபெற இருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் கேப்டன் தெம்பா பவுமா வழிநடத்த இருக்கிறார். ராய்ப்பூரில் நடைபெற இருக்கும் அப்போட்டி மதியம் ஒன்றரை மணிக்கு ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version