இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.சுப்மன் கில் தலைமை யிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ஸ்கோர் கொண்ட போட்டி மீண்டும் இங்கு சாத்தியமாகும். இருப்பினும், வானிலை காரணமாக, பனி குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். அத்தகைய சூழ்நிலையில், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச முடிவு செய்யலாம்.
