20 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி இன்று முதல்முறையாக டாஸில் வென்றது.

2023 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசியாக இந்திய அணி டாஸ் வென்றிருந்தது. அதாவது 753 நாள்களுக்கு முன்பு டாஸ் வென்றிருந்தது.

இதையடுத்து நடைபெற்ற 20 போட்டிகளிலும் தொடர்ச்சியாக இந்திய அணி டாஸ் வெல்லவில்லை. எதிரணிகளே டாஸ் வென்றன. இது இந்திய அணிக்கு பெரும் குறையாகவே பார்க்கப்பட்டது.

இந்த குறை இன்று முடிவுக்கு வந்தது. தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த 3வது போட்டியில் டாஸில் இந்திய அணி வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

20 போட்டிகளில் டாஸ் தோற்றபோதிலும், அதில் 12 போட்டிகளில் இந்திய அணி வென்றது. இது 60% வெற்றி விகிதம் ஆகும்.

இதற்கு முன்பு 2011, 2013-ம் ஆண்டுகளில் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 11 போட்டிகளில் டாஸ் வெல்லாதது குறையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version