ராய்ப்பூரில் இன்று (டிச.3) நடைபெறவுள்ள 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, தெ.ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தெ.ஆப்பிரிக்க அணி கைப்பற்றி சாதனை படைத்தது.
இதையடுத்து 2 அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதனைத் தொடர்ந்து, ராய்ப்பூரில் இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வென்றால், ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தனதாக்கும். இதற்கு தெ.ஆப்பிரிக்க அணி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்றையப் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
