சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சுமித் நாகல் தேர்வாகியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ், ’வேர்ல்டு குரூப்-1’ முதல் சுற்றுப் போட்டி செப்டம்பர் மாதம் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சுவிட்சர்லந்து அணிகள் மோதுகின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இடம்பெற்றுள்ளார்.
கடைசியாக 2023-ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பையில் மொராக்கோ அணிக்கு எதிராக சுமித் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றையரில் விளையாட கரண் சிங், ஆர்யன் ஷா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டையர் போட்டிக்கு யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி தேர்வாகினர். இதில் பாம்ப்ரி, கடைசியாக நடந்த சுவீடன், டோகோ அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. மாற்று வீரர்களாக சசிகுமார் முகுந்த், தக் ஷினேஷ்வர் சுரேஷ், ரித்விக் அறிவிக்கப்பட்டனர்.