கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீவக்காரமாரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஆசிம் என்ற சிறுவன், காலை 10.30 மணியளவில் ஸ்ரீவக்காரமாரி குன்னத்தேரி என்ற ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version