மகாராஷ்டிராவில் கூகுள் மேப் சொல்வதைக் கேட்டு காரை இயக்கிய பெண் ஒருவர், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் நவி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பீலாப்பூரில் இருந்து உல்வே என்ற பகுதி நோக்கி காரில் பயணித்துள்ளார். கூகுள் மேப் உதவியுடன் காரை அவர் இயக்கியுள்ளார். பீலாப்பூரில் உள்ள பாலத்தை கூகுள் மேப் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மாறாக அதற்கு அடியில் உள்ள வழியை பயன்படுத்துமாறு கூகுள் மேப் வழிகாட்டியுள்ளது.
இதனை நம்பி, கூகுள் மேப் காட்டிய வழியில் அப்பெண் காரை இயக்கிய போது, அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குவ் அந்த மீட்புப் படையினர் அப்பெணை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அப்பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்த கார் மீட்கப்பட்டது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
முன்னதக இதேப் போ, உத்திரபிரதேசத்தின் பதுன் மாவட்டத்தில் கூகுள் மேப் செயலியை நம்பி காரில் பயணித்தவர்கள் 5 அடி பள்ளத்தில் கவிழுந்ததில், 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு, கேரளாவில் சுற்றுலாப் பயணிகள் கூகுள் மேப் உதவியுடன் பயணித்த போது, கனழமையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலையில் சிக்கிக் கொண்டனர். பிறகு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.