ஐபிஎல் 2027 தொடங்குவதற்கு முன்னதாக, நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனது பழைய அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கே திரும்ப உள்ளார். இதற்கான வர்த்தக ஒப்பந்தத்தை டெல்லி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இறுதி செய்து வருகின்றன.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், கடந்த இரண்டு சீசன்களாக அந்த அணியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், தற்போது டெல்லி அணிக்கு  திரும்புவதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்காக அவர் தனது ஊதியத்தில் கணிசமான குறைப்பைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (13.25 கோடி ரூபாய்) லக்னோ அணிக்கு மாறுகிறார். பேட்டிங் வரிசையை வலுப்படுத்த டெல்லி அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு அக்சர் படேலிடம் இருந்து கே.எல். ராகுல் கைக்கு மாற வாய்ப்புள்ளது. மேலும், அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடியாக யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராகவும், சௌரவ் கங்குலி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version