இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது வரலாற்று சாதனை படைத்து அசத்தியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப் போர்டில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1ஓவர்களில் 358 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 225 ரன்கள் அடித்திருந்தது. தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் 31 ரன்கள் எடுத்திருந்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 13,290 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்தப் பட்டியலில், சச்சில் 15,921 ரன்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version