பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பீகாரில் இந்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்துள்ளது.

அதனடிப்படையில், பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 64லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் 65லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வாக்காளார்கள் நீக்கமாக இது பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version