பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 7.9கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் என மொத்தம் 65.2லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறப்பு தீவிர திருத்தம் (#SIR) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது விளைவுகளைப் பற்றியது.

எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும். தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும். இந்த அநீதியை நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம்”. என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version