மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரை நடைபெற்ற 3 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் பிரதமராக மோடி தொடர்ந்து வருகிறார். அப்படி பார்த்தால் இன்று வரை பிரதமராக அவர் 4,078 நாட்களை கடந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நீண்ட நாள் பிரதமர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1966ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதியில் இருந்து 1977-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை தொடர்ந்து 4,077 நாட்கள் பிரதமராக இருந்ததே சாதனையாக இருந்தது. அவருக்கு பிறகு மோடி இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக 2-வது நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த முதல் பிரதமர். காங்கிரஸ் கட்சியை சாராத பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர். இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து அதிக காலம் பதவி வகித்தவர். குஜராத் முதலமைச்சர், பிரதமர் என 2 ம்ழு பதவிக் காலங்களை நிறைவு செய்து, 2 முறை பெரும்பன்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தொடர்ச்சியாக 3 மக்களவை தேர்தல்களில் தங்களது கட்சியை வெற்றிக்கு அழைத்து சென்றதில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை பிரதமர் மோடி ஏற்கனவே முறியடித்து இருக்கிறார் மோடி.

Share.
Leave A Reply

Exit mobile version