2026 ஐபிஎல் மினி-ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக ₹643 மில்லியன் (ரூ.643 மில்லியன்) பணத்தை வைத்திருக்கிறது. மொத்தம் 13 வீரர்களை வாங்க வேண்டியிருப்பதால், கே.கே.ஆர் தங்கள் அணியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியது. பலத்த போட்டிகளுக்கு இடையில் கேம்ரூன் கிரீனை கேகேஆர் அணி ரூ.25.20 கோடி வாங்கியது. இதேபோல், சென்னை அணியில் இடம்பெற்றிருந்த, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானா, ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் விற்கப்பட்டார், இதன் மூலம் அவர் மிகவும் விலையுயர்ந்த இலங்கை வீரராக ஆனார். இதற்கிடையில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரது அடிப்படை விலையான ரூ/2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணி, இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை ரூ.2 கோடிக்கு வாங்கியது. KKR அணி நியூசிலாந்தின் ஃபின் ஆலனை ரூ.2 கோடிக்கு வாங்கியது. இரண்டு ஒப்பந்தங்களும் அடிப்படை விலையில் இருந்தன. குயின்டன் டி காக் வெறும் ரூ.1 கோடிக்குவிற்கப்பட்டார். அவரை MI அணி ஏலத்தில் எடுத்தது.
கடந்த ஆண்டு ரூ.23.75 கோடிக்கு விற்கப்பட்ட இந்திய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், 2026 ஐபிஎல் ஏலத்தில் வெறும் ரூ.7 கோடிக்கு விற்கப்பட்டார். அவரை ஆர்சிபி வாங்கியது. நியூசிலாந்தின் ஃபின் ஆலனை கேகேஆர் ரூ.2 கோடிக்கு வாங்கியது.
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2026 ஐபிஎல் ஏலத்தில் தனது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது.
லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோயை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.7.20 கோடிக்கு வாங்கியது. மேற்கிந்திய தீவுகளின் அகீல் ஹொசைனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி டார், ஐபிஎல் 2026 ஏலத்தில் பெரும் செல்வந்தரானார். அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துடன் ஏலத்தில் பங்கேற்ற, சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத இந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரை, டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு வாங்கியது.
