கே.எல்.ராகுலின் அதிரடி சதத்தால் நியூசிலாந்து வெற்றிபெற 285 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இந்தியா – நியூசிலாந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 24 ரன்களில் ஆட்டமிழக்க, ஒருபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். இருப்பினும் 56 ரன்களுக்கு கில் அவுட்டானர். பின்னர் களமிறங்கிய விராட் கோலி(23), ஸ்ரேயாஸ் ஐயர்(8), ஜடேஜா (27) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதிவரை களத்தில் இருந்த ராகுல் 92 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 284 ரன்கள் எடுத்தது. 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
