ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலகியதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகிஷ் சர்மா கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் முடிவு செய்திருப்பதாகவும், 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டு அவர் செயல்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் ரோகித் சர்மாவுக்கு 40 வயது ஆகிவிடும் என்பதால், அவர் அதற்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா வில இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.