இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா போராடி சமன் செய்த நிலையில், இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது மற்ரும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

இதன் மூலம் இங்கிலாந்து 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.1 ஓவரில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்தியாவின் வெற்றி குறித்து சச்சின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், “டெஸ்ட் கிரிக்கெட்… முழுக்க முழுக்க புல்லரிப்பு! தொடர் 2-2, செயல்பாடு 10/10! இந்தியாவின் சூப்பர்மேன்கள்! என்ன ஒரு வெற்றி! ” என்று பாராட்டியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version