ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் அதிரடி சதமும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சார் பட்டேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து  முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக சஞ்சு மற்றும் ருத்ராஜ் ஆகியோர்  களமிறங்கினர். கேப்டன் ருத்ராஜ் கெய்க் வார்ட் இந்த போட்டியிலும் விரைவில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனாலும் இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முந்தைய போட்டிகளுக்கு பதில் சொல்லும் விதமாக சஞ்சு சாம்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் விளாசினார். அதே போல ஆயுஷ் மாத்ரேவும் 56 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அண்யின் ஸ்கோர் கணிசமான அளவு உயர்ந்தது.

டெல்லி அணி சார்பில் அந்த அணியின் கேப்டன் அக்சார் பட்டேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். முக்கியமான தருணங்களில் சிஎஸ்கே பேட்டர்களின் கேட்சுகளை டெல்லி அணி வீரர்கள் தவறவிட்டனர்.

இதனை தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் அதிரடி சதமும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஒரு ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை விளாசுவதை சஞ்சு சாம்சன் ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார். அந்த வகையில், 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது 4-வது முறையாக ஒரு சீசனின் தொடக்கச் சதத்தைப் பதிவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலிலும் சஞ்சு சாம்சன் தற்போது இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா (554), விராட் கோலி (440) மற்றும் சூர்யகுமார் யாதவ் (421) ஆகியோருக்கு அடுத்தபடியாக, 400 சிக்ஸர்களுடன் சஞ்சு சாம்சன் இடம்பிடித்து அசத்தியுள்ளார். சஞ்சுவின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version