இந்திய கிரிக்கெட் வீரரான சர்பராஸ் கான் கிரிக்கெட்டுக்காக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.

உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் சர்பராஸ் கான். அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து அசத்தினார். அத்துடன் கடந்த நியூசிலாந்து தொடரில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் துவண்டு போகாத சர்பராஸ், கிடைக்கும் வாய்ப்புகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரை இந்திய அணியில் சேர்ப்பதற்கு அவரது உடலமைப்பும் காரணம் எனக் கூறப்பட்டது. உடல் எடை அதிகம் இருந்ததால், ரன் எடுப்பதற்கு சிரமம் ஆகலாம் என நிர்வாகத்தினர் தயக்கம் காட்டினர்.

இதனால் கிடைக்கும் நேரத்தில் தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய அவர், கடின உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொண்டார்.
அவரது முயற்சியின் வெற்றியாக தற்போது பிட்டாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தனது எக்ஸ் பக்கத்தில், “மிகச்சிறந்த முயற்சி, இளைஞனே! மிகப்பெரிய பாராட்டுகள், இது களத்தில் சிறந்த மற்றும் நிலையான செயல்திறனைப் பெற வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைக்க நீங்கள் செலவிட்ட நேரத்தை நான் விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version