இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து தசை பிடிப்பு காரணமாக கேப்டன் சுப்மன் கில் வெளியேறினார். டெஸ்ட் தொடரை தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் துவங்க இருக்கிறது. அதில் கேப்டன் கில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தொடரிலும் அவர் விளையாடப் போவதில்லை என்கிற செய்தியை சற்று முன்னர் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து ஒரு நாள் தொடர் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு வீரர்கள் அந்த இடத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர்தான் அவர்கள்.

இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ரிஷப் பண்ட் தான் கேப்டனாக வழி நடத்தி வருகிறார். இருப்பினும் ஒரு நாள் தொடரிலும் இவர் இந்தியாவை வழிநடத்துவாரா இல்லை கே எல் ராகுல் வழிநடத்துவாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னர்தான் தெரியும். ஆனால் நிச்சயம் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் தான் இந்திய அணியை வழிநடத்த போகிறார்கள். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவது கூடுதல் தகவல்.

