Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது…
    விளையாட்டு

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது…

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025Updated:June 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    GtZu70fW4AAUWKG
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன்களுடன் (136 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து 282 ரன்களை தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு எந்த அணியும் 280 ரன்களுக்கு மேலான ஸ்கோரை விரட்டிப்பிடித்ததில்லை. சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பத்தியே அதிர்ச்சி காத்திருந்தது. ரையான் ரிக்கெல்டன் 6 ரன்னில், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரமும், வியான் முல்டெரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 70-ஐ தொட்ட போது முல்டெரையும் (27 ரன்) ஸ்டார்க் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் பவுமாவுக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது. 2 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித் நழுவ விட்டார். கீழே விழுந்ததில் சுமித்துக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அத்துடன் அவர் சிகிச்சை பெற பெவிலியன் திரும்பினார். அவரால் மறுவாழ்வு பெற்ற பவுமா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார். இதனால் ஆட்டம் படிப்படியாக தென்ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது. ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய மார்க்ரம் தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் 4-வது இன்னிங்சில் (இலக்கை துரத்தும் இன்னிங்ஸ்) சதத்தை ருசித்த 6-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார்.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்தது. மார்க்ரம் 102 ரன்களுடனும் ( 159 பந்து, 11 பவுண்டரி), தசைப்பிடிப்பை சமாளித்து சாதுர்யமாக ஆடிய கேப்டன் பவுமா 65 ரன்களுடனும் (121 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.

    தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்களே தேவைப்பட்ட நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 66 ரன்னிலும், ஸ்டப்ஸ் 6 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த மார்க்ரம், 136 ரன்கள் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அத்துடன், தனது பணியை கச்சிதமாக செய்து முடித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 83.4ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டணி என்பது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கம்..
    Next Article ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்… இயக்குநர் யார்?
    Editor TN Talks

    Related Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.