Close Menu
    What's Hot

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்… இயக்குநர் யார்?
    சினிமா

    ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்… இயக்குநர் யார்?

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    27
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ஹீரோவாகவும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2017-ம் ஆண்டு ’மாநகரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை. அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு கார்த்தியை வைத்து இவர் இயக்கத்தில் வெளியான ’கைதி’ திரைப்படமானது மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

    28

    அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற டிரெண்டை உருவாக்கிய லோகேஷ் அதன் கீழ் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இவரது அடுத்த படைப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ’கூலி’ படத்தை இயக்கி வருகிறார்.

    29

    ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களும் அவர் கைவசம் உள்ளது. இயக்கம் மட்டுமில்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ். ’ஜிஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

    26

    இதற்கிடையில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் லோகேஷ். வருங்காலத்திலும் ஹீரோவாக வலம் வருவாரோ என்ற ரசிகர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியாகி கொண்டு வருகின்றன. தனுஷ் நடிப்பில் வெளியான ’கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களம்காண இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருப்பதால், தற்காப்பு கலையான மார்ஷல் ஆர்ட்ஸ் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது…
    Next Article மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை ஒருமையில் பேசி அடித்து விரட்டிய இன்ஸ்பெக்டர்..
    Editor TN Talks

    Related Posts

    முதல்வருக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தந்த சுந்தர் சி- குஷ்பு!

    June 3, 2026

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    June 3, 2026

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.