தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் ஹார்திக் பாண்டியா இரட்டை சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியநிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் தொடர் நாளை (டிச. 9) தொடங்குகிறது.

ஆசிய கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த ஹார்திக் பாண்டியா, தற்போது காயத்தில் இருந்து குணமாகி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்த தொடரில் அவர் இரட்டை சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை இந்திய அணிக்காக 120 T20 போட்டிகளில் விளையாடி உள்ள பாண்டியா, 1860 ரன்கள் மற்றும் 98 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். சர்வதேச T20 போட்டிகளில் அவர் 5 அரை சதங்கள் அடித்துள்ளார்.

இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் 140 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுக்கும்பட்சத்தில் சர்வதேச T20 போட்டியில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஹார்திக் பாண்டியா படைப்பார். கூடுதலாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில், இந்திய அணிக்காக T20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version