இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் இன்று (டிச.19) இரவு நடைபெறவுள்ளது.
தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரின் 5வது போட்டி இன்று நடக்கவுள்ளது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் தெ.ஆப்பிரிக்க அணியும், 3வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. லக்னோவில் நடைபெற இருந்த 4வது டி20 போட்டி பனிப்பொழிவு காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், 5வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வென்றால் டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும். இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால், 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடையும்.
இதனால் வெற்றி பெற 2 அணிகளுமே கடுமையாக போராடும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. எனவே இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்கும். போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாகக் காணலாம்.
