இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய A அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை நட்சத்திர வீரர் திலக் வர்மா கேப்டனாக வழிநடத்த உள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ரியான் பராக் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ப்ரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி மற்றும் நிஷாந்த் சிந்து போன்ற திறமையான பேட்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் ஹர்ஷ் துபே, விப்ராஜ் நிகாம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version