புரோ கபடி தொடரின் லீக் சுற்றில் பெங்களூருவை யு மும்பா அணி தோற்கடித்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது புரோ கபடி லீக் தொடர். 12-வது ஆண்டாக இந்தாண்டு கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரின் முதல் லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் செப்டம்பர் 12 முதல் 27 வரையிலும், சென்னையில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 10 வரையிலும், டெல்லியில் அக்டோபர் 11 முதல் 23 வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்ட்த்தில் யு மும்பா அணியும், பெங்களூரு அணியும் மோதின. இதில் யு மும்பா அணி 48-28 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. அதேப் போல மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் 37-32 என்ற புள்ளி கணக்கில் உ.பி யோத்தாசை தோற்கடித்தது.