ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது புதிய தலைமைத்துவக் குழுவை அறிவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம்   காரணமாகத் தொடரின் ஆரம்பகட்டப் போட்டிகளில் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபிஷேக் சர்மாவுக்குப் புதிய பொறுப்பு: சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா, அணியின் துணை கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். “பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து மீண்டு வரும் வரை, இஷான் கிஷன் கேப்டனாகவும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்” என்று எஸ்ஆர்ஹெச் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவருமே முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

https://x.com/SunRisers/status/2034226563965968747?

ஏன் இஷான் கிஷன்? சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ஜார்கண்ட் அணியை முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்திய இஷான் கிஷனின் கேப்டன்சி திறன் அனைவரையும் கவர்ந்தது. மேலும், கடந்த ஐபிஎல் சீசனில் அவர் எஸ்ஆர்ஹெச் அணிக்காக சதம் விளாசி அசத்தினார். பேட் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரின் போதே காயமடைந்ததால், அவர் காயத்திலிருந்து மீண்டு வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இந்த இளம்படை ஹைதராபாத் அணியை வழிநடத்தவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version