நடப்பாண்டுக்கான அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஆயுஷ் ஷெட்டி படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கவுன்சில் பிளப்ஸ் நகரில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டியின் இறுதி சுற்றில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையான் யங்கினை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் பட்டத்தினை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதையும் படிக்க: பூரி ஜெகநாதர் கோயில் ரதயாத்திரை உயிரிழப்பு.. ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை!
இதைப்போலவே, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தான்வி சர்மா, சீனாவில் பிறந்து அமெரிக்காவுக்காக ஆடி வரும் பெய்வென் ஜாங் உடன் மோதினார்.
இறுதி வரை போராடிய தான்வி சர்மா 11-21, 21-16, 10-21 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கிடம் தோல்வியடைந்தார்.