அதிரடி ஷாட்களுக்கு பெயர்போன கிரிக்கெட் நட்சத்திரம் பீகார் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு தனது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ளார்.
U-19 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர் முழுவதும் 439 ரன்கள் எடுத்து, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஏலம் எடுக்கப்பட்ட மிக இள வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தனது 14-வது வயதில் டி20 சதமடித்து சாதனை படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெயரையும் பெற்றார்.
இந்நிலையில், இப்போது தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறார். பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள போடார் சர்வதேச பள்ளி, வைபவ் சூரியவன்ஷியின் தேர்வு மையமாக நியமிக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் நீல் கிஷோர் இதை செய்தி நிறுவனமான ANI-யிடம் உறுதிப்படுத்தினார். பள்ளி அதிகாரப்பூர்வமாக தேர்வு மையமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
