லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான கார்லோஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர், நோவக் ஜோகோவிச் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டென்னிஸ் உலகின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், இன்று லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப்பில் தொடங்குகிறது.
வரும் ஜூலை 13-ம் தேதி ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியுடன் முடிவடையும் இத்தொடரில், நடப்பு சாம்பியனும், பிரெஞ்சு ஓபனை வென்றவருமான கார்லோஸ் அல்கராஸ், தனது பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள களமிறங்குகிறார்.
உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், 24 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் நான்கு வீரர்கள் இந்தியாவிலிருந்து களமிறங்குகின்றனர்.
இந்தியாவின் மூத்த வீரரான ரோஹன் போபண்ணா, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லேவுடன் இணைந்து களமிறங்குகிறார்.
யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவேயுடன், ரித்விக் பொல்லிபள்ளி, ருமேனியாவின் நிக்கோலஸ் பேரியன்டோஸுடன் இணைந்து விளையாடுகின்றனர்.
இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுவல் ரெய்ஸ்-வரேலாவுடன் ஜோடி சேர்ந்து போட்டியிடுகிறார்.