ர்வதேச நீதி மிஷன்( International Justice Mission -IJM) ,  கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆய்வரங்குகளில் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி (Tamil Nadu State Judicial Academy) யின் வள ஆதார நிபுணராக (Resource Person) பங்களித்து வருகிறது.

இந்த நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது, மற்றும் கொத்தடிமை முறையை ஆதரிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி, தொடர்ச்சியான சுற்றறிக்கைகள் மூலம் விரைவான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசிற்கும்,  தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவுக்கும் நன்றி தெரிவித்து இண்டெர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலத்தின் அட்வ்கெஸி ப்ரஸிடெண்ட் ரேச்சல் பிரசன்னா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ,  சிறப்பு கவனம் செலுத்தி, மாநில காவல்துறை மற்றும் குற்ற வழக்குத் தொடர்வு இயக்கக வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்புக் காட்டியதன் விளைவாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2026 ஏப்ரல் வரை உள்ள காலகட்டத்தில் மட்டும், 12 கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், Tamil Nadu State Judicial Academy மற்றும் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோரின் ஊக்கத்துடன், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பை முன்னெடுக்க நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டததையும், 2025 நவம்பர் மாதத்தில் மறுவாழ்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வரங்கமும் நடைபெற்றதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், “ இவ்வகை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் மற்றும் குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், காவல்துறையினருடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு 60 நாட்களுக்குள் வழக்கை  முடிக்க வழிகாட்டி நெறிமுறைகள்  வெளியிடப்பட்டதையும்,  சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டதையும்- இப்படி அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், நீதித்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி ஆகியவற்றின் ஒருங்கிணைந்து நடவடிக்கையால் மறுவாழ்வு அளித்து சமூகத்தில் மீளச் சேர்க்கும் பணிகளையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்திருப்பதையும்” பாராட்டி உள்ளார்.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version