தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனையின் முடிவில், தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நகலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து எல்.கே.சுதீஷ் பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு வெறும் மாநிலங்களவைத் தேர்தலோடு மட்டும் நின்றுவிடாமல், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஒப்பந்தம் ராஜ்யசபா இடத்திற்கு மட்டுமே எட்டப்பட்டுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிடவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பான விரிவான ஆலோசனைகள் வரும் நாட்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு திமுக கூட்டணியுடன் கைகோர்த்திருப்பது தமிழக அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ‘

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version