மிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பான திருப்பம் உருவாகியுள்ளது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு முக்கிய அதிர்ச்சியாக, முதல்வர் முதல் பல முக்கிய அமைச்சர்கள் வரை பலர் முன்னிலை இழந்து பின்னடைவை சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், கோ.வி. செழியன், மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட மொத்தம் 21 அமைச்சர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முக்கிய அமைச்சர்கள் பலர் பின்னடைவை சந்தித்திருப்பது, திமுகவின் மொத்த இட எண்ணிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவுக்கு எதிரான அதிருப்தி?

அரசியல் நிபுணர்கள் இதை ஆட்சிக்கெதிரான அதிருப்தி (anti-incumbency) எனப் பார்க்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த குறைகள்
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பிரச்சினைகள், சில திட்டங்களின் செயல்பாட்டில் ஏற்பட்ட விமர்சனங்கள் போன்ற அனைத்தும் சேர்ந்து இந்த தேர்தலில் ஆட்சிக்கு எதிரான வாக்காக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

நகர்ப்புறம் vs கிராமப்புறம்

இந்த தேர்தலில் நகர்ப்புறங்களில் திமுகக்கு சவாலான நிலை உருவாகியுள்ளதாகவும், குறிப்பாக நடுத்தர வர்க்க வாக்காளர்கள் மாற்றத்திற்கான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாறாக, சில கிராமப்புறங்களில் கடுமையான முக்கோணப் போட்டி நிலவுவதால், வாக்குகள் பிளவுபட்டு பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

புதிய சக்திகளின் தாக்கம்

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே ஆதரவை ஈர்த்தது, பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கியை பாதித்ததாக மதிப்பிடப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version